அந்த விலாசத்தை நெருங்கி விட்டேன்.
அந்த முகவரியை நேற்று உனது
இறுதிப் படுக்கையில் அறைகறையாக சொல்லி வைத்தாய்
தாத்தா உனது இறப்பு எமக்கு உறவை தேடித்தருமென
நீ நினைத்திருப்பாய் போல.
ஏழாவது தெரு,36ம் நம்பர் வீடு, கணகசபை காலணி
என்று கடைசி சொல்லை தனக்குள் விழுங்கி கொண்டாய்
முழுமைபெறா அநத விலாசத்தை நான் எப்படி நெருங்குவேன்
உன் இறுதிக் காரியம் நடப்பதற்கு முன்னர்
உன்னை பிரிந்து தூரமாக வாழும் வனஜா அத்தையை
நான் எப்படி உனக்கு வாய்க்கரிசு போட அழைத்து வருவேன்.
ஒவ்வொரு கிராமமாக அழைகிறேன் 36ம் நம்பர் வீடுகள் இருக்கின்றது.
ஆனால் அத்தையை காண முடியவில்லை.
நான் எஞ்சிய மணி நேரங்களில் அந்த பெரும் நகரத்தை
அடைய வேண்டும்.
பட்டணம் என்றால் பெரிசு தானே
பயணப்பட்டு பேரூந்தை விட்டு இறங்குகிறேன்
தாத்தாவின் அறைகுறை விலாசத்துடன்
அந்த நகரம் என்னை அன்புடன் வரவேற்றது.
தாத்தா இறப்பதற்கு முன் சில ஊர் பற்றி
பேசினாரே என்ற யோசனையில்
சில தெருவை கடந்து விட்டேன்.
தூத்துக்குடி என்றார் ஒரு வேளை இதுகூட
ஊராக இருக்குமோ.
சேர் ஆட்டோ வியர்வை வாடை
சப்தம் நிறைந்த நகரம்
வளர்க்கப்பட்டிருந்த கட்டிடக் காடுகள்
எனது பார்வையை நீளச் செய்கிறது
நிறுத்தப்பட்டதும் வீதிப் பெயர்ப் பலகை
தூத்துக்குடி என பொறிக்கப்பட்டிருந்தது என்னை
ஆறுதலடையச் செய்தது.
வேகமாக தெருவை கடக்கிறேன்
பரபரப்பாக மனிதர்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
விலாசத்தை நான் நெருங்கி விட்டேன்
அந்த வீடு அழுகையால் நிறைந்திருக்கிறது
பரபரப்பான சூழ்நிலை பதறறமாக என்னைக்கடக்கின்ற
அவரை நிறுத்தி விலாசத்தை கொடுக்கிறேன்
ஆமா வனஜாதான் இறந்து விடகெடார்
போராட்டத்தில்.
சாவில் கலக்கிறேன்
நிச்சயமாக தாத்தா என்னை புரிந்து
கொண்டிருப்பார்.
உம்மாவும் இஞ்சித் தேநீரும்
சோம்பல் முறித்து எழுந்த நிமிஷம்
ஆம்பலாய் மலர வைக்கும்
கலை என் தாயின் இஞ்சித் தேநீருக்குத் தான் உள்ளது.
பத்திரிகைச் செய்தி தினம் காலை படிப்பதும்
எந்திரிக்க முடியாமல் குந்திருப்பதும்
வேலைக்கு நேரமாகிடிச்சியென்று உம்மா அழைப்பதும்
இந்த இஞ்சித் தேநீருக்கு அப்புறம் தான் காதிலயே விழும்.
இன்னொரு கப் கேட்க தோனும்
கேட்டுடா உம்மாவுக்கு வேலை கூடும்.
மழை இரவும்
பனி இரவும் குளிர் பரவும்
அந்த தேநீரில் கூதல் ஒதுங்கும்.
சுறுசுறுப்பாய் வாப்பா இயங்குவதன் காரணம்கூட
இந்த தேநீரின் சுவையாககூட இருக்கலாம்.
நான் வாப்பாக்கிட்டயோ உம்மாக்கிட்டயோ
இது பற்றி கேட்டதில்லை.
நேற்று முதல் முறையாக உம்மாவை கோபித்தேன்
இஞ்சி முடிந்தது என்றதும்
எனக்கு கோபம் எழுந்தது.
உம்மா புன்னகைத்தா ஏன்டா சின்ன பையனாடம்
இப்படி அடம் பிடிக்கிறாய்.
ஒரு வேளை குடிக்காடி என்னடா என்று கேட்டு நகர்ந்தாள்.
நான் கவலையாகியது உம்மா அறிந்திருக்க வில்லை.
உம்மாவும் அந்த தேநீரும் எனக்கு ஒன்று தான்
அவ்வளவு பிடிக்குமென்பதை உம்மா தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
....
பெயர் தெரியா இடத்தின் பயணக் குறிப்பு
அந்த குகையின் இருட்டை விட்டு நகர்ந்து
வெளியே வெளிச்சத்தை என் உடல்
சுமந்து கொண்டு
ஒரு பாலை நிலத்தின் சூட்டை பின் தொடர்கிறது.
கண்களுக்கெட்டும் தூரத்தில் ஒற்றையாய் நிமிர்ந்து
வளர்ந்து நிற்கும் சில மரங்களின் கிளைகளில்
பூர்த்து நிற்கும் சில பெயர் தெரியாத பறவைகளின் கீச்சலையும்
ஆரவாரத்தையும் செவிகளில் ஏந்திக் கொண்டு
திசை நேர்பட நடந்தாகிறேன்.
மரங்களை நெருங்க நெருங்க பறவைகளின் விளையாட்டை
ரசிக்கவும் என்னால் முடிந்திருந்தது.
மரங்களையொட்டி குளக்கரை
அகோர தரை வெடிப்பில் செதில் செதிலாக
நீர் தேங்கி நிற்க.
சில பறவைகள் அமைதியாக தாகம் தீர்க்கும் காட்சியை
கடந்து செல்கிறேன்.
நானும் பறவையோடு பறவையாக
தாகம் தீர்த்துக் கொண்டு.
..