ஒரு பக்கச் சுவர் முழுவதும்
நிரம்பியுள்ளது கரும்பலகை
எப்போதும் போலவே அதன் முதுகில்
யார் யாரோ வரைந்த ஓவியங்கள் எழுத்துக்கள்.
கரும்பலகை தனக்கென எதையும்
தனியாகக் குழந்தைகளுக்குச் சொன்னதில்லை-
காட்டுவது மட்டுமே கரும்பலகையின் பணி
குழந்தைகள் விரும்பாத அனைத்தையும் கரும்பலகை
தன்னில் எழுதிக் கொள்கிறது
ஒரு அழிப்பான் விரைவாக அழித்துவிடாதா
என்ற குழந்தைகளின் ஏக்கம்
கண்ணுக்குத் தெரியாத சொற்களால் வரையப்பட்டுள்ளன.
கண்களை மூடிக்கொண்டே
கடந்துவிட முனைகின்றன குழந்தைகள்
கருப்புத் திரையை நீக்கி
சுதந்திரமாய் வரைய காலத்தின் கீதத்தைச் திசைக்கொன்றாய்
பறக்கின்றார்கள்...