• Time to read: 1 minute
  • 125
  • 0

வா அவந்திக்கா...!!!

By ந.பிரதீப்

செவ்வந்திப் பூக்களின்
இளவரசியாய் இருக்கையில்
இன்னும் அழகாயிருந்தாய்...!!
பிறக்காத நம் குழந்தையைப் போல...!!

அடைமழையை
அடைத்து வைத்திருக்கிறேன்
உனக்கெழுதிய காதல்க் கடிதங்களை
விழுங்த்துடிக்கும் பேனைகளில்...!!

ஆடைகளைவோம்
அடை மழையில் ஆடுவோம்...!!
நனைந்த பிறகு மீண்டும் நனைவோம்
உன்னாலே நானும் என்னாலே நீயும்
நனைந்த பிறகும் மீண்டும் நனைவோம்...!!
காதலைக் கூத்தாடுவோம்
காமத்தைக் கொண்டாடுவோம்...!!

குறிகள் மீதான கற்பைக் குறித்து
நான் அக்கறை கொள்ளப்போவதில்லை...!!
புரிதல் போதும்,
 
புனிதமான காதலென்று
நான் பொய் சொல்லப் போவதில்லை...!!

என் விரல்கள் கோத
உன் கார்கூந்தல் நீளமில்லை
இருந்தாலென்ன
என் முத்தங்களைப் புதைக்க

உன் நெற்றி போதும்...!!
வா அவந்திக்கா...!!
உன் வலது காலை

எடுத்து வைக்கச் சொல்லும்
மாமியார் என் வீட்டிலில்லை...!!
முப்பது நாட்களும் தீட்டுத் தொடக்கில்லாமல்
கடந்து போகட்டும் மாதங்கள்...!!
உன் காலிடுக்கில் கசிகின்ற இரத்தம்
என் போர்வைகளையும் கறை செய்யட்டும்...!!

தூங்கப் போகிறேன்,
உனக்கும் தூக்கம் வந்தால்
"மார்பின் மேலே தூங்கென்று" சொல்லப்போவதில்லை...!!

அன்பின் பெயரால்
உன்னை அடிமையாக்கப் போவதில்லை
நீ விரும்பும் இடத்தில் படுத்துக்கொள்...!!


 



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation