• Time to read: 1 minute
  • 288
  • 0

கரை

By நித்யா

கரை உணரும் பாதங்களை

காற்றின் குளிர் தீண்டலாம்

சிறு சிப்பிகள் தொட்டு பேசலாம் - தினம்

கோடி பாதங்கள் நடந்து தேய்ந்தாலும்

முன்னிரவு நடுநிசியில்

நிலாச்சாரல் நனைத்து தேற்ற

கடல் தின்ற கண்ணீரெல்லாம் நுரைத்து கரையலையும்

அக்கணம்

மணல் தொடும் பாதத்தின் 

சுட்டுவிரல் மட்டுமே கண்ணீரின் சூடறியும்..

 



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation