'நேர்கோடு’ மலேசியாவிலிருந்து வெளியீடு கண்டுள்ள சமகால இலக்கிய இணைய இதழ். உலக முழுக்க உள்ள படைப்புகளை எழுத்தாளர்கள் மத்தியில் பண்டமாற்றம் செய்து கொள்ளும் களமாக இவ்விதழ் அமைகின்றது. மலேசியாவில் உள்ள இந்தியர்களின் படைப்புகளை மட்டும் அறிமுகம் செய்வதோடு நிற்காமல் மலாய், சீன இலக்கியங்களை அறிமுகப்படுத்தவும் நேர்கோடு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதன் முதல் தாக்கமாக மொழிபெயர்ப்பு படைப்புகளின் அவசியம் குறித்து இதழில் தொடர்ந்து பேசப்பட்டு வரும். அதோடு,  எழுத்தாளர்கள் பலர் அருகில் இருக்கின்றார்கள். புதிய படைப்பாளர்கள், புதிய சிந்தனைகள் படைப்புகள் உலகம்  வழி வளம் வருதல் அவசியம். ஆகவே,  படைப்புகள் எல்லைகளைக் கடந்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் பல கப்பல்கள் தேவைப்படுகின்றன. அதில் நேர்கோடும் ஒன்றாக செயல்படும்  என நம்புகின்றேன்.  நன்றி


மணிமொழி வீராசாமி
(நேர்கோடு ஆசிரியர்)